Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Complaint On AR Murugadoss! Justice Delayed?

Wednesday, December 5th, 2018
Complaint On AR Murugadoss! Justice Delayed?

Falling in the controversies is not new to “A R Murugdoss.” He had been complained about stealing the stories of others and make films with biggies and make them a super duper hits. However, we couldn't blindly trust any stories about the biggies. He was complained about stealing the “ Kaththi Click to look into! >> Read More... ” story from Anbu Rajasekar Anbu Rajasekar was born on April 2, 1982. He hails >> Read More... , who had made a short film Thaaga Bhoomi. Even after a series of complaints, the police department didn’t take any action and hence Anbu Rajasekar writes a letter to the CM, to take action against Murugadoss. Here is his letter to “ Edappadi K Palaniswami Edappadi K Palaniswami is an Indian Politician. He >> Read More... ”:

  பெரு மதிப்பிற்கும் பெரு மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எனது பெயர் அன்பு ராஜசேகர். 2005லிருந்து சென்னையில் வசித்து வருகிறேன் தஞ்சாவூர் மாவட்டம் இளங்காடு கிராமம் எனது சொந்த ஊர். எம்சிஏ முடித்து மென்பொருளில் பணியாற்றிய நான் 2012லிருந்து குறும்படங்களை இயக்கி வருகிறேன். 2012ல் தாகபூமி எனும் குறும்படம் இயக்கப்பட்டதும்  இக்குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரங்கள் A Rமுருகதாஸ் உதவி இயக்குனர் வாய்ப்பு வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டதும் நான் திரு A Rமுருகதாஸ் அனுப்பியதுமான உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் இந்த நாலு வருட போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் எனது ஆதாரங்களை சமர்ப்பித்து A Rமுருகதாஸ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தேன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இருப்பினும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நிலுவையில் உள்ள சிவில் வழக்கினால் எந்தவித தடையுமில்லை கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மக்கள் மாண்புமிகு தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் ஆதாரங்களை இணைத்து புகார் மனு ஒன்றை Fax மூலம் அளித்துள்ளனர். அப்புகாருக்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீதிவேண்டி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தோம் அதன்பிறகு வீட்டிலிருந்தபடியே தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டேன் அதனால் நவம்பர் 4ஆம் தேதி காலை வீட்டில் மயங்கி விழுந்தேன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளாமல் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மருத்துவர்களின் வற்புறுத்தலால் நவம்பர் 8ம் தேதி சலைன் வாட்டர் ஏற்றப்பட்டது. நவம்பர் 9ம் தேதி மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பத்து நாட்கள் உண்ணா விரதத்தை கடைபிடித்துள்ளேன். A Rமுருகதாஸின் சிந்தனை திருட்டால் நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் கடந்த 4வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். எனக்கு நடைபெறவிருந்த திருமணம் இதனால் தடைபட்டு நிற்கிறது இவ்வாறாக A R முருகதாஸால் ஒட்டுமொத்த வாழ்வும் பாதிப்படைந்துள்ளது இத்தகைய பாதிப்பை ஏற்படுத்திய ஆர் முருகதாஸ் மீது தங்கள் பொறுப்பில் இயங்கிவரும் காவல்துறை மூலம் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டியும்  தங்களை சந்திக்க அனுமதியும் நேரமும் வேண்டியும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி

 தங்கள் உண்மையுள்ள

அன்பு ராஜசேகர்

LATEST MOVIE REVIEWS


Today's Release

20 Apr, 2024

Today's Release

20 Apr, 2024

Today's Release

20 Apr, 2024

Today's Release

20 Apr, 2024

Running in Theaters

19 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

31 Aug, 2024