Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Gowthaman Speaks About Rajiv Gandhi Assassination Accused!

Friday, March 8th, 2019
Gowthaman Speaks About Rajiv Gandhi Assassination Accused!

“V Gowthaman,” the director turned politician released a Press Statement today. In the statement, he spoke about the Rajiv Gandhi assassination case accused. Already he had spoken a lot about them. As the Tamilnadu Governor, Banwarilal Purohit Banwarilal Purohitis an Indian politician and the >> Read More... didn’t sign for the release of those seven people in the prison, Gowtham said that they are doing injustice to those seven. Although the Tamilnadu Government passed a resolution, the GUV has been purposely delaying, stated Gowthaman, who runs Tamil Perarasu Katchi. He had also requested everyone to take part in the human chain protest that would happen on 9th March 2019. Here is the Press release of Gowthaman:

“இருபத்தெட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தமிழக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழக அமைச்சரவை கொண்டு வந்த தீர்மானத்தின்மீதும் மதிப்பளிக்காமல் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யாமல், ஆளும் அதிகாரவர்க்கங்களும் ஆளுநர் அவர்களும் காலம் கடத்துவது என்பது அநீதியின் செயல் மட்டுமல்ல அறமற்ற செயலும்கூட.

முருகன் ஒரு சிறையில், நளினி மற்றொரு சிறையில், அவர்களின் திருமணமாகாத மகள் புலம்பெயர் தேசம் ஒன்றில். கையில் தவழ்ந்த குழந்தையை தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு வந்தவன், தற்போது தன்னைப் போன்றே மீசையும் ஆளுமாக வளர்ந்த மகனை இடையிலிருக்கும் இரும்பு கம்பிகளுகிடையே நின்றபடி வார்த்தைகள் எதுவுமற்று கண்ணீரை மட்டுமே பரிமாறிக் கொண்டிருக்கும் ராபர்ட் பயஸ். கருகருவென வளர்ந்த முடியோடு வந்த ஒருவன் ஒரு முடிகூட கருப்பில்லாமல் முழுக்கவும் வெள்ளையாகிப் போன சாந்தன். தான் பெறாமல் ஆசையோடு பாசம் காட்டி வளர்த்தெடுத்த தாய் தனது மகன் விடுதலையாகி வந்தால் அவனை வாழ வைத்து பார்த்துவிட்டு கண் மூடலாமே என கண்ணீரோடு காத்திருக்கும் ரவிச்சந்திரனின் தாய். கழுத்துக்கு தூக்குக் கயிறு காத்திருந்த நிலையிலும் சிறைக்கொட்டடியிலிருந்தபடியே படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்களை வாங்கிய அறிவு நிறைந்த பேரறிவாளன். பெற்ற மகனை காப்பாற்ற தனது கால்கள் தேயத்தேய இருபத்தெட்டு ஆண்டுகள் ஓடிய அற்புதம்மாளின் கால்கள் தனக்கு முதுமை என்றும் பாராமல் தனது இறுதி ஓட்டமாக பிப்ரவரி 24ம் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக இடைவிடாமல் தமிழ்நாடு முழுவதும் சுழன்றடித்த நிலையிலும் கவர்னர் மாளிகையும் அதிகார வர்க்கங்களும் கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்துவது என்பது மனிதகுலத்திற்கு எதிரானது. தாமதிக்கப்படும் நீதி அநீதிக்கு சமமானது. மனிதம் காக்க நினைப்பவர்கள் இதனை மனதில் கொள்ளவேண்டும். எழுவர் விடுதலையை தாமதப்படுத்துபவர்கள் ஒரே ஒரு நொடி தனது தாயின் நிலையில் வைத்து அழுது அழுது காய்ந்த கண்களோடு வெம்பிப் பதறும் அற்புதம் அம்மாள் அவர்களை வைத்து பார்த்தால் ஒற்றை நொடியில் விடுதலை சாத்தியமாகும்.

பாராளுமன்றத் தேர்தல் அறிவித்துவிட்டால், அதன் பின்பு எழுவர் விடுதலை என்பது இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீளும் என்கிற பேராபத்தை மனதில் கொண்ட மனித நேயமிக்கவர்கள் அனைவரும் அற்புதம் அம்மாள் அவர்களின் அறைகூவலை  மனதில் ஏந்தி, வருகின்ற 9.3.2019 சனிக்கிழமை அன்று மாலை 4 மணியிலிருந்து ஆறு மணிவரை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கின்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கெடுப்போம். தலைநகரத்தில் உள்ளவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் அலைகடலென திரளுவோம்.

ஏழு தமிழர்களையும் சுதந்திரப் பறவைகளாக மீட்டெடுப்போம்!

வ.கௌதமன்

தலைவர்

தமிழ்ப் பேரரசு கட்சி”