Director “ P Bharathiraja Director P Bharathiraja is a popular person, who r >> Read More... ” is shocked after hearing the announcement from Tamilnadu Theater Owners’ Association. They had announced that they would give 60% of the sales proceeds from “ Rajinikanth 'Rajinikanth' is the name that is known in >> Read More... ,” Ajith Kumar Ajith Kumar is a prominent Tamil film actor, model >> Read More... and “Vijay” movie tickets and 55% of the sales of Suriya Sivakumar Suriya Sivakumar is undoubtedly the biggest star i >> Read More... , Jayam Ravi Born on September 10, 1980, Jayam Ravi’s original >> Read More... , “ Silambarasan He was born in 1983 in Chennai, Tamilnadu. He is a >> Read More... ,” “ Dhanush This lanky superstar Dhanush is an actor from Tami >> Read More... ,” “ Sivakarthikeyan Sivakarthikeyan is a stand-up comedian, actor, and >> Read More... ” and Vijay Sethupathi Vijaya Gurunatha Sethupathi was not born with silv >> Read More... movies and 50% from the rest of the stars’ movies to the distributors. This is not a right decision and this will put the producers in trouble, stated Bharathiraja.
Here is his statement: என் இனிய தமிழ் மக்களே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய ஒரு அபாயகரமான செயல்திட்டத்தை திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் இயங்குகின்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60 சதவிகித வசூலையும் சூர்யா ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 சதவிகித வசூலையும் மற்ற நடிகர்களின் படங்களுக்கு 50 சதவிகித வசூலையும் அந்தப் படத்தை விநியோகம் செய்பவர்களுக்கு இவர்கள் தருவார்களாம். அந்த அறிக்கையின் முதல் பத்தியில் மகிழ்ச்சியுடனும் வளர்ச்சியுடனும் வளர்ந்து வரும் வேளையில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த வரிகளைப் படிக்கும்போது திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் இருக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நசுக்க அவர்கள் முடிவெடுத்து விட்டார்களோ என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியவில்லை. இந்த விகிதாச்சார முறை மட்டும் அமுலுக்கு வருமானால் ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கின்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது. இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் நிர்வாகிகளும் இல்லை என்றாலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. ஆகவே திரையரங்கு உரிமையாளர்கள் புதியதாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதை பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்து விட்டு அதற்குப் பின்னர் அந்த முடிவுகளைப் பற்றி தெரியப்படுத்த வேண்டுகிறேன் இந்த நியாயமான வேண்டுகோளை அறிவிப்பதுதான் முறை யாக இருக்கும் இவை எல்லாவற்றையும் மீறி திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால் இந்த முடிவுகளை எதிர்த்து பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி
அன்புடன்
பாரதிராஜா
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES