Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Vijayakanth Appreciates TN Government And Requests Central Government!

Saturday, November 17th, 2018
Vijayakanth Appreciates TN Government And Requests Central Government!

Vijayakanth Born as Vijayaraj, he was known well as Vijayakant >> Read More... ,” the party president of DMDK released a press statement relating Gaja cyclone. The actor turned politician appreciated the TN government for their precautionary measures for Gaja cyclone. He also requests the central government to provide the relief fund soon, so that the fishers, who lost their boats and houses, would rebuild it, soon. Here is the statement by Vijayakanth:

தமிழக அரசும் அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. இரவும் பகலும் கண்விழித்து விரைவாக செயல்பட்ட அனைத்து துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனுக்குடன் ஆணை பிறப்பித்து சிறப்பாக பணிகளை ஆற்றியதற்கு  தேமுதிக சார்பில் வரவேற்கிறோம். மிகமுக்கிய பாதிப்புக்கான இடமாக வேதாரண்யம் மற்றும் நாகை உள்ளது. அங்கு அதிக வீடுகள் இழப்பு மீனவர்கள் படகுகள் சேதம், 36 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது. உடனடியாக மத்திய அரசு புயல் நிவாரண நிதியை தமிழக அரசுக்கு தந்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு படகுகள் சரி செய்வதற்கும் வீடுகள் சேதம் அடைந்தது சரி செய்வதற்கும் சாலைகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பதற்கும் மின்கம்பங்களை உடனடியாக சரி செய்வதற்கும் உதவிட வேண்டும் தமிழக அரசு கஜா புயல் புயல் நிவாரண தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் பாதிப்பை உடனடி கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் அந்த பகுதி மக்களுக்கும் வேண்டி அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 தேசிய முற்போக்கு திராவிட கழகம்

விஜயகாந்த்

நிறுவனத் தலைவர்/ பொதுச் செயலாளர்