Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Press Note From Nadigar Sangam Regarding 96 Movie Producer!

Saturday, November 10th, 2018
Press Note From Nadigar Sangam Regarding 96 Movie Producer!

Nadigar Sangam released a press note stating that Madras Enterprises that produced “Thupparivalan,” Veera Sivaji Click to look into! >> Read More... and “ 96 Click to look into! >> Read More... ” hadn’t yet settled the remuneration for the leads Vishal Reddy Born as Vishal Krisna Reddy, he is called upon as >> Read More... , Vikram Prabhu Vikram Prabhu works in Tamil films as an Actor. Fr >> Read More... and Vijay Sethupathi Vijaya Gurunatha Sethupathi was not born with silv >> Read More... respectively. Hence the Nadigar Sangam decided not to work with the producer anymore and requested the members of Nadigar Sangam not to co-operate the particular filmmaker, hereafter. Here is the Press Statement from Nadigar Sangam:

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பான துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் சங்க உறுப்பினர்கள் திரு விஷால் அவர்கள் நடித்தமைக்காக வீரசிவாஜி என்ற திரைப்படத்தில் திரு விக்ரம் பிரபு அவர்கள் நடித்தமைக்காக வழங்கப்படாமல் உள்ளது. மேலும் 96 என்ற திரைப்படத்தில் நடித்த சங்க உறுப்பினர் திரு விஜய் சேதுபதி அவர்கள் ஊதிய பாக்கி பெற்றுக் கொள்ளாமலேயே திரைப்படம் திரையிடப்பட்டது. மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை திரையிட்டுள்ளது. படம் வெளியீட்டின்போது இக்கட்டான சூழ்நிலையில் என்றும் நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் இந்நற்செயலை பலவீனமாக எடுத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாக்கி கொண்டது. கடந்த காலங்களில் இருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து நிர்வாக குழு கலந்து ஆலோசித்து அதனடிப்படையில் இனி வரும் காலங்களில் இது போன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் / தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் (நடிகர்கள்/ நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்வுக்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண் டாம் என முடிவெடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்வுக்கும் திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

 நன்றி

தென்னிந்திய நடிகர் சங்கம்