Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Finally, Kamal Opens About Students’ Protest!

Tuesday, December 17th, 2019
Finally, Kamal Opens About Students’ Protest!

Kamal Haasan Kamal Haasan is the most versatile actor that Indi >> Read More... , who was expected to comment about Jamia protests, has opened about it today. Yesterday, Siddharth Srinivasan and “ G V Prakash Kumar In Indian cinema, there are very few singers and m >> Read More... ” commented about it and condemned the attack against the students. He speaks about the condition of Hindus in Pakistan and Sri Lankan Tamils. Kamal also speaks about the petrol price and economy. When the country is in a deep economic crisis, what is the need of the CAB, asks Kamal. He also questions about the farmer’s future and the criminal activities happening in India against women.

Kamal Haasan posted on his Twitter page, “தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது, சாதிப்பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலன்றும் சொல்வார் நீதிப்பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக்கொடுமைகள் வேண்டா அன்பு தன்னில் செழித்திடும் வையம். 102 ஆண்டுகளுக்கு முன் பாரதி சொன்னது இது. இந்தியாவின் முதுகெலும்பு என சொல்லப்படும் கிராமங்களில் விவசாயி தற்கொலை செய்து கொண்டு செத்துக் கொண்டிருக்கும் பொழுது அதை தடுக்க வழி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசாங்கத்தின் சூழ்ச்சி. சரி பாதி விழுக்காடான பெண்கள், வயது பாரபட்சமின்றி உயிர் பயத்தில் வாழும் நேரத்தில் சட்டத்தின் மூலம் அதை தெளிவிக்காமல், வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளை செய்வது அரசு மக்களுக்கு எதிராக தொடுக்கும் போர் வியூகம். எதிர்காலத்தின் தூண்களான மாணவர்கள் அரசியல் புரிதலுக்காக கேள்வி கேட்கையில் கண்ணீர்புகைக்குண்டுகள் எறிவதும், காக்கிகளைக் கொண்டு அடிப்பதும்தான் அரசாங்கத்தின் பதில். பெட்ரோலின் விலை ரூபாய் 70ஐ தொட்ட போது குஜராத்தில் கோடிகள் நஷ்டமாகும் என கொதித்தவர் ஆளும் போது நாட்டில் பெட்ரோலின் விலை78. பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, விலைவாசி விண்ணோக்கி சென்று கொண்டிருக்கிறது... என அனைவரும் கலக்கத்தில் இருக்கும் வேளையில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கான அவசரம் என்ன என்கிற கேள்வி தான் நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியே. பாகிஸ்தானின் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை,இலங்கையின் இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை?ஆண்டாண்டு காலமாக தமிழகம் தோள் கொடுக்கும் என்று நம்பும் இலங்கை தமிழருக்கு நாம் சொல்ல போகும் பதில் என்ன?முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தின் போது தப்பித் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் நிலை என்ன? கேள்விகளுக்கு விடையளிப்பதை விடுத்து கேள்வி கேட்பவனின் குரலை ஒடுக்கும் வேலை தான் டெல்லியிலும், அலிகரிலும், அஸ்ஸாமிலும் நடக்கிற அரச பயங்கரவாதம்.மாணவர்கள் மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜன நாயகம் வழங்கிய கருத்துரிமையின் மேல் விழும் அடி. கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்காலத்தலைமுறையிடம் ஏற்படுத்த விழும் அடி. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் விழும் அடி. மாணவனுக்கு பதிலில்லை. விவசாயிக்கு வாழ வழியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை. வேலை வாய்ப்பு இல்லவே இல்லை எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை. இந்த அரசு செய்யும் வேலைகளை எல்லாம் உலக வரலாறு முன்பே கண்டிருக்கிறது.”

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

3 May, 2024

Running in Theaters

3 May, 2024

Running in Theaters

3 May, 2024

Running in Theaters

3 May, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024

Upcoming

2024