Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Saravana Stores Arul Wishes To Join Nayan!

Saturday, April 15th, 2017
Saravana Stores Arul Wishes To Join Nayan!
சரவணா ஸ்டோர்ஸ் என்றதும் நம் நினைவுக்கு வந்ததென்னவோ செல்வரத்தினம் அண்ணாச்சி தான். இப்போது சரவணா ஸ்டார் என்றாலே அனைவர் கண் முன்னும் நிற்பது விளம்பரங்களில் ஆடி பாடி வரும் அருள் செல்வரத்தினம் தான். யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அவர் கடையை விளம்பரப்படுத்த, அவரே இறங்கி விட்டார். எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படாமல் தமன்னாவுடனும் ஹன்சிகாவுடனும் ஒய்யார நடை போட்டு வந்த அருள் செல்வரத்தினத்திற்கு சினிமாவில் நடித்திட ஆசையாம். நடிப்பதற்கு வந்தால், அது நயன்தாராவுடன் தான் ஆரம்பிப்பேன் என்று அடித்து கூறுகிறாராம் அருள் அண்ணாச்சி! பொறுத்திருந்து பார்ப்போம்!