Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Murugadoss’ Words Of Appreciation For Varun!

Tuesday, October 30th, 2018
Murugadoss’ Words Of Appreciation For Varun!

Finally “ A R Murugadoss A.R. Murugadoss is such a familiar name all over I >> Read More... ” said that Varun Rajendran has written a story and registered its ten years back. He also had the same thought as him, said ARM. After settling the “ Sarkar Click to look into! >> Read More... ” issue, Murugadoss issued a letter of appreciation about Varun and it is here: தேர்தலில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான ஓட்டை கள்ள ஓட்டாக அடுத்தவன் போடுவது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் அபாயகரமான குற்றம். ஆனால் இது பொது நிகழ்வாக இன்றும் தொடர்கிறது. இந்த அநீதியை எதிர்த்து தன் ஓட்டை இழந்த ஒரு ஹீரோ போராடி நீதியை நிலைநாட்டி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினால் எப்படி இருக்கும் என எனக்கு கருவாக ஒரு கற்பனை உதித்தது. பின் மாதக்கணக்கில் விவாதித்து திரைக்கதை எழுதி சர்கார் என்ற திரைப்படத்தை இயக்கி எடுத்தேன். இது ஒரு உதவி இயக்குனர் வருண் @ KV ராஜேந்திரனுக்கும் உதித்து எனக்கு முன்பே எங்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அதே கருவை அவரும் சிந்தித்து எனக்கு முன்பே பதிவு செய்து இருந்தபடியால் வளர்ந்துவரும் உதவி இயக்குனர் KV ராஜேந்திரனை பாராட்டி அவர் உழைப்பையும் கௌரவிக்கும் வகையில் இதை பதிவு செய்து ஊக்குவிக்கிறேன். திறமையுள்ள உறுப்பினரை திரை உலகுக்கு அடையாளம் காட்டிய நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்