Vijay Sethupathi Vijaya Gurunatha Sethupathi was not born with silv >> Read More... has been getting ready for the release of his 25th film, “Seethakathi” directed by Balaji Tharaneetharan Balaji Tharaneetharan is a Chennai boy and started >> Read More... and the film is scheduled to hit the screens on 20th December 2018. Now, Indian National League protests against the title of the film. They say that Seethakathi is a great philanthropist. Although he was a Muslim by birth, he is a role model for all. They also say that Seethakathi had funded Umaru Pulavar to release his Seerapuranam. He is a legend and as Vijay Sethupathi said that Seethakathi is an entertainer, it had hurt the feelings of Indian National League. Here is the Press Report of INL:
நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவர
உள்ள சீதக்காதி திரைப்படத்தின் பெயரை
மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகிறோம் ..
சீதக்காதி எனற பெயரில் பொழுதுபோக்கு
திரைப்படம் எடுத்து இருப்பதாக தகவல்
வருகிறது சீதக்காதி தமிழர்களின்
ஒரு அடையாளமாக வாழ்ந்தவர் இஸ்லாமியராக இருந்தாலும் அனைத்து மக்களுக்காகவும் மனிதநேயத்திற்காகவும்
வாழ்ந்த மா மனிதர் சீதக்காதி அவர்கள் ...
ஷெய்கு. அப்துல் காதர் என்கிற சீதக்காதி
அவர்கள் பெயரை கொண்டு பாலாஜி
மற்றும் தரணிதரன் இயக்கத்தில்
விஜய் சேதுபதி அவர்களின் 25 வது திரைப்படமான "சீதக்காதி" வெளியிட
இருப்பதாக செய்திகள் வருகின்றன
விஜய் சேதுபதி பேட்டி அளிக்கும் போது
சீதக்காதி ஒரு காமெடி (பொழுதுபோக்கு) திரைபடம் என கூறியுள்ளார் ..
சீதக்காதி இராமநாதபுரம் கீழக்கரையில் வாழ்ந்தவர் ஷெய்கு. அப்துல் காதர் என்கிற சீதக்காதி 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர் ..
பன் முகங்கள் கொண்ட சீதக்காதி அவர்கள் பெரிய வணிகர் வங்கம் சீனா மலாக்க போன்ற நாடுகளில் இருந்து தனது சொந்த கப்பல்கள் மூலம் முத்து கிராம்பு பாக்கு மிளகு இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தவர் ...
உமறுப் புலவரின் சீறாப்புராணம் பாடுவதற்க்கும் தமிழ் இலக்கியங்கள் வெளியிடுவதற்கும் நிதியுதவி செய்துள்ளார்
கொடைவள்ளல் என்ற அடைமொழி
கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது ...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதக்காதி அவர்களின் கண்ணியத்தை
சீரழிக்கும் எந்தவித நடவடிக்கையையும்
இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது
ஆகையால் ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதி அவர்களின் சிறப்பை போற்றும்
விதமாக இல்லாமல் பொழுதுபோக்கு படம்
எடுத்து அதற்கு சீதக்காதி என பெயர்
சூட்டுவதை இந்திய தேசிய லீக் கட்சி
வன்மையாக கண்டிக்கிறது ..
விஜய் சேதுபதி அவர்கள் நல்ல நடிகர்
ஆகையால் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு சீதக்காதி என பெயர்
சூட்டுவது அனுமதிக்க முடியாது உடனே
சீதக்காதி என்ற பெயரை மாற்ற வேண்டும்
இல்லை என்றால் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட்டம் நடத்த
வேண்டிய அவசியம் ஏற்படும் ...
அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES