Tamilnadu Milk Agents Association slams “ Vijay As they always say, "it runs in the blood", the sa >> Read More... ” for ignoring their call. The Association administrators wanted the actor to stop the fans from wasting the milk by pouring it to his cut outs. Instead of pouring the milk to the cut outs, the fans could organize a blood donation camp or something useful to the public, suggested the association. They have also mentioned that none of the Tamil actors lend their ears to them but the Telugu star “ N T Rama Rao Jr Jr Ntr is a proven actor from his childhood itself >> Read More... ” requested his fans not to waste the milk by pouring it to his lifeless cutout. He started it from the film Janatha Garage Click to look into! >> Read More... . Although the Association slammed Vijay and the other stars, they had wished “Vijay” for his film “ Mersal Click to look into! >> Read More... .” Here is their request notice of the association to Vijay.
மரியாதைக்குரிய நடிகர் திரு. விஜய் அவர்களுக்கு வணக்கம்.
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தங்களின் சிறப்பான நடிப்பில் மெர்சல் திரைப்படம் வெளியாக இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. மெர்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிட எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
நிற்க....
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவர்களின் கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை தடுத்து நிறுத்தி, உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை விட திரைப்படம் வெளியாகும் திரையரங்க வளாகத்தில் முதல் 10நாட்கள் அரசு மருத்துவமனைகளோடு இணைந்து இரத்ததான முகாம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடத்திட ரசிகர்களையும், ரசிகர் மன்றங்களையும் நல் வழிப்படுத்தி, ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை பயனுள்ள வகையில் பயன்படுத்திட வேண்டும் என்கிற கோரிக்கைகளை கடந்த 2015ம் ஆண்டு முதல் எங்களது சங்கத்தின் சார்பில் முன்னெடுத்து வருவதோடு "கபாலி" பட வெளியீட்டின் போது சூப்பர் ஸ்டார் அவர்களையும், "விவேகம்" பட வெளியீட்டின் போது நடிகர் அஜீத் அவர்களையும் சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் இருக்கும் முன்னணி நடிகர்கள் எங்களது சங்கத்தின் கோரிக்கைகளை செவிமடுக்காத சூழ்நிலையில் தெலுங்கு நடிகர் மரியாதைக்குரிய திரு. ஜூனியர் என்.டி.ஆர். அவர்கள் தனது ஜனதா கேரேஜ் திரைப்பட வெளியீட்டின் போது ரசிகர்கள் எவரும் தனது கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த சூழ்நிலையில் தீபாவளி திருநாள் அன்று தங்களின் நடிப்பில் மெர்சல் திரைப்படம் வெளியாக இருப்பதால் தங்களின் கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை தடுத்து நிறுத்தி உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை விட திரைப்படம் வெளியாகும் திரையரங்க வளாகத்தில் முதல் 10நாட்கள் அரசு மருத்துவமனைகளோடு இணைந்து இரத்ததான முகாம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடத்திட ரசிகர்களையும், ரசிகர் மன்றங்களையும் நல் வழிப்படுத்தி, ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை பயனுள்ள வகையில் பயன்படுத்திட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி எங்களது சங்கத்தின் சார்பில் தங்களை நேரில் சந்தித்து பேசுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தங்களை தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் தாங்களோ எங்களது தொலைபேசி அழைப்பை ஏற்காமல் துண்டித்து விட்டீர்கள். அதுமட்டுமன்றி கட்செவி அஞ்சல் வாயிலாக தங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டோம். ஆனால் எதற்கும் இதுவரை தங்கள் தரப்பில் இருந்து பதிலோ, அறிக்கையோ வரவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தங்களுக்கும் பிற முன்னணி நடிகர்களைப் போல சமூக அக்கறை இல்லை என்பதும், ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை போஸ்டர் ஒட்டுவதற்கும், கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறீர்களோ? என்கிற சந்தேகம் எழுகிறது.
எனவே இந்த சமூகத்தின் மீதும், ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தி மீதும் தங்களுக்கு அக்கறை இருக்குமாயின் மெர்சல் திரைப்பட வெளியீட்டின் போது எங்களது சங்கத்தின் கோரிக்கைகளை செயல்படுத்த உடனடியாக ஊடகங்கள் வாயிலாக அறிக்கை வெளியிட வேண்டுகிறோம்.
அன்புடன்
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனர் & மாநில தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES