Tamilnadu CM “ Edappadi K Palaniswami Edappadi K Palaniswami is an Indian Politician. He >> Read More... ” expressed his condolences for the death of the veteran theater and cinema artist Typist Gopu Typist Gopu, born as Gopalarathinam in 1934, is a >> Read More... . In his condolence note, he spoke about Gopu’s cinema career and his performance with Tamilnadu’s late CMs, Dr “ M G Ramachandran M G Ramachandran was a demigod for his fans. And h >> Read More... ” and Madam “ Jayalalithaa Jayalalithaa Jayaram, more popularly known as Pura >> Read More... .” EPS also says that Typist Gopu had been honored with Kalaimamani for his service to the theater play industry. Here is the condolence note of EPS:
“பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகருமான திரு டைப்பிஸ்ட் கோபு அவர்கள் 6.3. 2019 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணக்கால் கிராமத்தை சேர்ந்த திரு டைப்பிஸ்ட் கோபு அவர்கள் திரு கே பாலச்சந்தரின் நாணல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இதுவரை சுமார் 600க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பல்வேறு வேடங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றவர். இவர் மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களில் நடித்த பெருமைக்குரியவர். டைப்பிஸ்ட் கோபு அவர்கள் நாடகத் துறைக்கு ஆற்றிய சேவைக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குரியவர். மேலும் இவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர். அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய வரும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த வருமான டைப்பிஸ்ட் கோபு அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும். டைப்பிஸ்ட் கோபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரை உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
K பழனிசாமி
தமிழ்நாடு முதலமைச்சர்”
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES