Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Parthiepan’s Official Statement After Becoming The Vice President!

Tuesday, December 25th, 2018
Parthiepan’s Official Statement After Becoming The Vice President!

R Parthiepan Radhakrishnan Parthiepan is a renowned actor, cine >> Read More... ,” the actor, director cum producer, has been appointed as the Vice President of TFPC, as the elected VP, Gautham Menon Gautham Vasudev Menon is known for his directional >> Read More... , didn’t attend none of the meetings, so far. Parthiepan, who initially denied to become the VP, accepted it after thinking twice. Here is his official statement regarding this:

பணிவான வணக்கம்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அங்கத்தினர்கள் அனைவருக்கும். நான் தயாரிப்பாளர் ஆனது என் படைப்பின் சுதந்திரத்திற்கு உருப்பினரானது கடமை செயற்குழு உறுப்பினர் ஆனது இருந்ததைக் காட்டிலும் சிறந்ததை செய்ய நம் உழைப்பையும் நேரத்தையும் கூடுதலாக தரலாம் என்ற தர்ம சிந்தனை இன்றி லாப நோக்கம் அல்ல இதுவரை நான் கண்டதெல்லாம் …சிறிய பலனுக்கு கூட சீரிய முயற்சி எடுக்கப்பட்டது என்னவோ உண்மை காணாதது ஊழல் மற்றும் உப தொழிலாக பதவிகளை பயன்படுத்தி யாரும்

 லஞ்ச லாபம் அடைவது. நான் என்றாவது அறிந்திருந்தால் அன்றே பதவி விலகி இருப்பேன் நேர்முக மறைமுக கலெக்ஷன் என்று ஒன்று இருந்தால் மட்டுமே எலெக்ஷன் சூடு பிடிக்குமோ என்னவோ. அதிரடி அறிக்கைகளும் ஆர்ப்பாட்டங்களும் காண்கையில் பொதுமக்களுக்கும் அதுவே தோன்றுகிறது. நியாயம் கேட்க நீதிமன்றத்தில் பல வாசல்கள் உண்டு முடிவாய் உரிமையை நன்முறையில் நிலைநாட்ட தேர்தல் என்ற ஒன்று மிக அருகில் இருக்கையில்

 பூட்டு போட்டு வன்முறையில் ஈடுபடுவது அநாகரீகமானது என்பதை நான் மட்டுமல்ல நீதிமன்றமும் வன்மையாக கண்டித்துள்ளது சுமூகமாக நேசக்கரம் நீட்டும் நான் வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவன் பதவி மூலம் அந்த நட்பில் பிளவு ஏற்படுவதை விரும்பாதவன். எனவே ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போன்ற அரசியல் நமக்குள் இருந்தால் அதைக்

களைந்து ஒற்றுமை மேம்படு முயற்சிப்போம் நேற்று திடீரென தலைமையும் செயற்குழு உறுப்பினர்களும் என்னை துணை தலைவராக தேர்ந்து எடுத்த போது முதலில் மறுத்து பின் சூழ்நிலை மதித்து சம்மதித்தேன்.

தேர்தலின் போதே திரு.விஷால் என்னை உயர் பொறுப்புக்கு

 நிற்க சொல்லியும் மறுத்தவன் நான். இந்த அமைப்பின் பதவிக்காலம் முடியும் வரை என்னால் இயன்ற ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று முடிவெடுத்து EC உறுப்பினராக ஆனேன். இந்த பதவியில் எந்த சுகமும் இல்லை பணிச்சுமை மட்டுமே மிச்சமுள்ள குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சமான ஒரு இசைக் கலைஞனுக்கு உரிய மரியாதையை கௌரவமாக செய்து நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவிடும் வகையில் செய்யும் ஒரே ஒரு பொறுப்பை மட்டுமாவது பொறுப்பாய் செய்திட இடையூறின்றி அனைவரும் இணைந்திட வேண்டுகின்றேன் நிகழ்ச்சி முடியும்வரை தலைமையின் அனுமதி இன்றி தனித்தனியாக பேட்டிகள்  கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி நன்றி

வணக்கம்

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

25/12/2018