Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

TTV Dhinakaran’s May Day Wishes!

Tuesday, April 30th, 2019
TTV Dhinakaran’s May Day Wishes!

Tomorrow is the May Day, the special day for the Labors! “ T T V Dhinakaran T T V Dhinakaran is a member of the political part >> Read More... ” wished the labors, a happy May Day. He said that the jobs shouldn’t be based on agreement and limitations. The labors should be given the right pay for their work, whether it is a government organization of private. He had also said that the labor exploitation should be stopped and the labors should be respected. Here is his press statement about this:

உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள்!

 உழைப்பின் வலிமையால் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பாளிகள் தங்கள் உரிமைகளை போராடி வென்றெடுத்த இந்நாள் உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை உரக்கச் சொல்லும் பொன்னாள். உழைப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனையையும் தடையின்றி கொடுக்கிற சமூகமும் அரசும் தான் சிறந்ததாக திகழ முடியும். சமீபத்திய ஆண்டுகளாக எல்லாவற்றுக்கும் போராடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர் முறையை இருக்கக்கூடாது என்று உலகெங்கும் குரல்கள் ஒலித்துக் வரும் நிலையில் அதனை வலுப்படுத்தி அவர்களின் உழைப்பை உறிஞ்சி விட்டு தூக்கி எறியும் வேலை வரம்பு ஒப்பந்தம் போன்றவற்றை இந்தியாவில் கொண்டுவந்திருக்கிறார்கள். உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமின்றி மூளையால் உழைக்கிற அறிவுசார் துறைகளிலும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கின்றன அரசு தனியார் என்ற பேதமெல்லாம் இல்லாமல் எல்லா நிறுவனங்களிலும் உழைப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் கிடைக்கச் செய்வதற்கு இந்த மே தினத்தில் உறுதியேற்போம் உழைப்புச் சுரண்டலை எந்த இடத்திலும் அனுமதிக்காமல் உழைப்பவருக்கு எங்கும் முதல் மரியாதை என்பதை நடைமுறை ஆக்குவோம். நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே… என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பட பாடல் வரிகளை மெய்ப்பிப்போம். உண்மையான உழைப்பு என்றைக்கும் வீணாகாது என்பதற்கிணங்க உழைப்பவர்கள் கனவுகள் அனைத்தும் நனவாக நெஞ்சம் நிறைந்த மே தின வாழ்த்துக்கள்!

டிடிவி தினகரன்

LATEST MOVIE REVIEWS


Running in Theaters

22 Nov, 2024

Parari Movie Review

Running in Theaters

22 Nov, 2024

Kuppan Movie Review

Running in Theaters

22 Nov, 2024

Jolly O Gymkhana Movie Review

Running in Theaters

22 Nov, 2024

Nirangal Moondru Movie Review

Upcoming

29 Nov, 2024

Sathur (Part 1) Movie Review

Upcoming

29 Nov, 2024

Gajaana Movie Review

Upcoming

20 Dec, 2024

Mr House Keeping Movie Review