Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Silambarasan’s Teary Words About Indian 2 Accident!

Friday, February 21st, 2020
Silambarasan’s Teary Words About Indian 2 Accident!

Silambarasan He was born in 1983 in Chennai, Tamilnadu. He is a >> Read More... ,” who has been busy shooting his next movie “Maanadu” directed by Venkat Prabhu Venkat Prabhu is a multifaceted and multitalented >> Read More... and produced by Suresh Kamatchi Suresh Kamatchi is a Tamil film producer cum direc >> Read More... released a statement about "Indian 2" accident. He requested the respective associations to ensure the safety of the workers and also requested the people to work carefully. He expressed his condolences to the family of the deceased and wished the injured to get well soon.

Simbu stated, “எமது சினிமா தொழிலாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் குறிப்பாக சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாக பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில் தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும். அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டது என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது. இறந்துபோன தொழிலாளர்கள் உதவி இயக்குனர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டி கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும். இனி ஒருபோதும் இப்படி ஒரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். பணமோ வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடு செய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிலம்பரசன் TR

 நடிகர்"