The South Indian Artists Association alias Nadigar Sangam has started their fasting protest to lift the ban on Jallikattu. The president of the Sangam, “
Nassar
Nassar is one of the multi talented actors in the >> Read More...
” requested the media not to cover the protest by the actors. He said that the entire credit goes to the students and they should be given the due respect. During the interview,
Karthik Sivakumar
Karthik Sivakumar, or popularly known as Karthi, i >> Read More...
, "
Ponvannan
Ponvannan is a popular and leading Tamil actor who >> Read More...
,"
Aadukalam Naren
Aadukalam Naren was born in Chennai the heartland >> Read More...
and "
Manobala
Comedy is the forte of Manobala (Manobala Mahadeva >> Read More...
" were with Nassar. Here is the request by Nassar to the media.
“எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !! இன்று தமிழக எல்லைக்குள் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிகிடக்கும் மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கி இருக்கிறார்கள். முதுபெரும் தமிழ்க்குடியின் ஒரு கலாச்சார சின்னம் முடக்கப்பட்டுக்கிடக்கிறது. அதை மீட்டு கொண்டு வர தன்னிச்சையாய் தன்னார்வத்தோடு அலைகடலென மாணவர் சமுதாயமும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர். அவ்வெழுச்சியினால் ஈர்க்கப்பட்டு பெண்களும் , குழந்தைகளுமாய் வீதி இறங்கி பங்குபெறுகின்றனர். இம்மாபெரும் போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஆதரவை தருகிறது. வெறும் பேச்சுக்களால் அல்லாமல் மௌனத்தை மொழியாய் கொண்டு “மௌன அறவழி அமர்வை” நடத்துகிறது. நடிகர் சமூகம் மட்டுமின்றி பல்வேறு துறை சார்ந்தோரும் கலந்து கொண்டு ஆதரவை வெளிபடுத்த போகின்றனர். யாரும் கருத்துகளை , ஆலோசனைகளை வெளிபடுத்த போவதில்லை. ஆனால், எங்களது இந்த நிகழ்வை டி.வி மற்றும் இணையதள நண்பர்கள் வீடியோ கவரேஜ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் அதற்கு பதிலாக, உண்மையில் இப்போராட்டத்தின் காரணகர்த்தாக்கள் அதோ வெட்டவெயிலிலும் பனியிலும் , பசியிலும் சிதறாமல் கூடியிருக்கும் அம்மாணவர்கள் , பல்துறை சார்ந்த இளைஞர்கள் அவர்கள் தான் மக்களால் அறியப்பட வேண்டியவர்கள் , அவர்கள் கருத்துகள் தான் கேட்கப்பட வேண்டியவை. ஆகவே எங்கள் அருமை ஊடக நண்பர்களே அங்கு நடப்பவைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். எங்கள் பயணத்தில் முதற்படி முதல், எங்களை புரிந்துணர்ந்து ஆதரவளித்து மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். எங்கள் ஒவ்வொரு வளர்ச்சியையும் நேர்த்தியோடு பதிவு செய்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்நிகழ்வு நடத்தவேண்டும் என்று தீர்மானிக்கிறபோது, மனது கனத்தாலும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இன்றைய சூழலில் யாரை முன்னிறுத்த வேண்டுமோ நாம் இருவரும் சேர்ந்து அவர்களை முன்னிறுத்துவோம். இது நம்கடமை என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறோம். என்றும் போல் அன்புடனும் புரிதலுடனும்... நாசர், தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம்.”
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES