“M S Subbulakshmi,” the legendary Carnatic singer, who was born in Madurai in the year 1916, had impressed crores of people with her voice. Her vocals are still the magical music for the people. She impressed all classes of audiences including the people who don’t even know the classical music. Her songs rejuvenated many and hence she is still living in the hearts of the people. She was honored as the resident artist in Tirumala Tirupathi Devasthanam. She died on 11th December 2004. “ Vaali Born on 29th of October in 1931 is our lyricist Va >> Read More... ,” the popular lyricist cum poet wrote a poem about her, after hearing the death news of the music queen.
Here it is:
நடுத்தமிழ் நிற்கிறது நடுத்தெருவில் .... தன் விலாசத்தை தவறவிட்டு ;
அதன் - திருவிழி உகுக்கிறது தீர்த்தச் சொட்டு !
எம்.எஸ் ஏறிவிட்டார் வாகனம் ;
எல்லோர்க்கும் இருந்தென்ன ? எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்!
இழந்து நிற்கிறது இசைக்கலை - தான் தங்கியிருந்த - எம்.எஸ் என்னும் இன்ஷியலை!
ஓதம்சூல் உலகின்காண்- ஓர் ஒப்புலட்சுமி-இல்லாதவர் சுப்புலட்சுமி ;
தூய வாய்மலரால்- இசைத் தேனைத் துப்புலட்சுமி
என்னணம் எண்டிசை-இனி பயணிக்கக் கூடும் -நம் பண்டிசை?
எம்.எஸ் என்பது சங்கீத சாஸ்திரத்தின் பெண்முக வடிவு ;
இப்- பெண்முக வடிவைப் பெற்றது -வீணை சண்முகவடிவு !
வீணை சண்முகவடிவு-இவ் வையத்தை.. விரல்வழி வென்றார் ;
அவரது குலக்கொடி சுப்புலட்சுமி குரல்வழி வென்றார் !
அம்புவி மேல் அவர்போல் - ஆர்க்கும் அமைந்ததில்லை தொண்டை;
அக்தேபோல் அவர் போல் ஆரும் ஆற்றியதில்லை .. தொண்டை வழியாகப்-பொதுநலத் தொண்டை !
கிருதி; சுருதி; இவை இரண்டும் - அவரை அண்டியிருந்தன தமது தாயெனக் கருதி
ஒருவரும் கண்டதில்லை -அவை ஒன்றோடு ஒன்று பொருதி ;
இலயத்தை- இராகத்தை- சிவப்பனுவாய் வெள்ளையனுவாய் சுவீகரித்துக் கொண்டிருந்தது .. எம்.எஸ் ஆக்கையுள் எங்கனும் சஞ்சரித்த குருதி !
என்ன சொல்லி என்ன ? எரிக்கும் மயானத்தில் இருக்கும் .. வேகுந்தலம் புகுந்தது -காளிதாசன் சாகுந்தலம் !
என் எமபுரத்தில் கூவித்திரி என்று - கூற்றுவன் அழைக்க-அந்தோ அவன் கூடப்போனாள் சாவித்திரி ;
தென்மதுரையில் கண்மலர்ந்து வட மதுரைக் கண்ணனிடம் மீண்டும் போய்ச் சேர்ந்தாள்- மீரா!
பாட்டூர்புரம்-எனும் பதிமதுரை தோன்றிக் -கடைசியில் கோட்டூர்புரம் போந்த கோகிலத்திற்கு .. மாங்குயிலும் பூங்குயிலும் மண்மிசை ஆகுமோ நேரா ?
தீ தின்றது .. சங்கீத வாணியின் சரீரத்தை தான்;அது சாப்பிடப் போமோ -அவரது சாரீரத்தை ?
குறுந்தகடுகளில்;நாடாக்களில்- குடியிருப்பார்.. எம்.எஸ் என்றும் சாகாது;
கடல்-வெயிலடித்துக் காய்ந்து போகாது !
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST ARTICLES