Today, the popular actor
Captain Raju
died due to some health issues in Kerala. The Nadigar Sangam shared its condolence message and spoke high about the actor. Here is the condolence message issued by Nadigar Sangam:
பிரபல வில்லன் குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு உடல்நலக்குறைவால் 17/9/2018 இன்று அதிகாலையில் கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ராணுவ அதிகாரியாக பணியாற்றும் வேளையிலேயே கலை ஆர்வத்தால் நண்பர்களுடன் சேர்ந்து மும்பையில் நாடகக் குழு அமைத்து நாடகங்களில் நடித்து வந்தார். 1980இல் ரத்தம் என்ற மலையாள படத்தின் மூலம் திரைப்பட நடிகர் ஆனார் கடந்த 37 ஆண்டுகளில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். விக்ரம் கதாநாயகனாக நடித்த இதா ஒரு சினேக கதா என்ற மலையாள படத்தை இயக்கி இயக்குனராகவும் தனி முத்திரை பதித்தார். மேலும் அனைத்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார் படங்களிலும் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர். தர்மத்தின் தலைவன், சூரசம்ஹாரம், ஜீவா, என் ஜீவன் பாடுது, ராஜகுமாரன் ஆகியவை அவரது முக்கிய படங்களாகும். அவரது இழப்பு தென்னிந்திய திரைதுறை ஈடுகட்ட முடியாத மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம்