Mansoor Ali Khan Mansoor Ali Khan was born in the small village cal >> Read More... , the actor cum director, was a member in ADMK under the captaincy of Madam “ Jayalalithaa Jayalalithaa Jayaram, more popularly known as Pura >> Read More... .” The Honorable CM was announced dead on 5th December 2016, after 75 days of hospitalization. Many people doubt her death, as she was admitted to the hospital reporting dehydration and fever. Later it was said that she had been receiving treatment for breathing issues and finally it was said that she suffered cardiac arrest and died. Mansoor Ali Khan is one among her ardent followers, who demand the CCTV footage and the details of the treatment given by Apollo Hospitals. He released a statement and it is here…
தாயே! தமிழ்மகளே! தர்மத்தின் தவப்புதல்வியே!
உனக்கா இந்த கதி! என்ன ஆயிற்று? எப்படி ஆயிற்று! இரண்டரை மாதம் முகத்தை கூட காட்டாமல் 10 கோடி மக்களின் தலைவியாய் இருந்தும் பக்கத்தில் ஒருவரைக் கூட அண்ட விடாமல் A.k.47 தாங்கிய போலிஸ் படை பாதுகாப்புடன் உள்ளே நடந்தது சிகிச்சையா? சிரச்சேதமா? கவர்னர் ரோசய்யா மலர்வளையம் வைக்கிறார் தொபீர் என்று உள்ளே போகிறது..! கால்களை காணவில்லை? உன்னை காப்பாற்ற வந்த வேலைக்காரி உயிரோடு இருக்கிறாரா? இல்லையா! லண்டனில் இருந்து வந்தவர் பிணம் உறையவைக்கும் நிபுணர்! இதுதான் உயரிய சிகிச்சை அளிக்கபடுகிறதன் ரகசியமா! கைதேர்ந்தவர்களால் கண்காணிக்கப் பட்டதன் பொருள் காவல்துறையை கையில் வைத்து கொண்டு கையூட்டு கொடுத்து, கொடுத்து அனுப்பவா? பார்க்கவிடாமல் பள்ளத்தில் மூடிவிட்டு பாரதரத்னாவா? C.C.Tv பதிவுகளை பார்க்க...வை முதலில். 3 நாளில் 7 தமிழர்கள் விடுதலை ஆவார்கள் என்ற வீராங்கனையே! காவேரி முல்லைபெரியாறு என வழக்குப் போட்டு தமிழர்களின் உரிமையை வென்றெடுத்த மங்கையர்க்கரசியே! உன்னை வெல்ல முடியாத வீணர்கள் சதி செய்து சண்டாளர்களை ஏவி கொண்றாடிவிட்டனரோ! அடிவயிறு பற்றி எரிகிறது! கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், நிரந்தரப் பொதுச்செயலாளர் என துதி பாடியதுகள் எல்லாம் புழுவாய் நெளிந்து வளைந்து... மலம் திண்கிறதே! சொந்த அத்தையை பார்க்க விடாமல் கல்யாணம், கருமாரிக்கும் செல்லவிடாமல் தடுத்து உறவுகளை வேறறுப்பதுதான் உற்ற தோழியின் செயலா? மங்காத மனம் படைத்த தெய்வத் திருமகளே! சுற்றி வல்லூறுகள் கொத்தி கொதறும் போது நின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? நீதிமன்றங்களில் நீதியிருந்தால் நல் மனம் படைத்த நீதி தேவர்கள் விசாரிப்பர்! சத்யமேவ ஜெயதே எனின் சத்யம்! உண்மை வெல்ல வேண்டும்! கொடநாடு வாருங்கள் தேனீர் தருகிறேன் என்று மகிழ்ந்திருந்தார் என்றீர்களே? அட கொள்ளி வாய் பிசாசுகளா அதை செல்போனில் படம் பிடித்து மக்களுக்கு காட்டியிருந்தால் உங்கள் கையில் குஸ்டம் பிடித்திருக்குமா? மண்டப்புளுகு புளுகுபவன் எல்லாம் மருத்துவமனை நடத்துகிறான்! ஸ்ரீரங்கத்து பெருமாளே! உன் கருடனை விட்டு மெரினாவில் செய்தி சேகரித்தாயே விரைவில் உண்மையை கொண்டுவா மக்கள் மனம் கொதிக்கிறது!
மன்சூரலிகான்
20/12/2016
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES