Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Captain Vijayakanth Helps The Stranded TN Fishermen In Andaman!

Tuesday, April 28th, 2020
Captain Vijayakanth Helps The Stranded TN Fishermen In Andaman!

Some of the Tamilnadu fishermen, who ventured fishing in Andaman, had been stranded there for more than a month. Captain “ Vijayakanth Born as Vijayaraj, he was known well as Vijayakant >> Read More... ,” who came to know about this through the newspaper and TV news, ordered his people in Andaman to help them. More than 300 fishermen are stranded and they received help from DMDK party men. Vijayakanth posted about this on his official Twitter page, “அந்தமானில் சிக்கி தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேமுதிக சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 8க்கும் அதிகமான மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் அந்தமானில் சிக்கி தவித்து வருகின்றனர். தங்குவதற்கு இடவசதி, உண்ண உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக செய்தி அறிந்தேன். அந்தமானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உடனடியாக தேமுதிக சார்பில் உதவி செய்யுமாறு ஆணையிட்டேன். இதையடுத்து தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த், அந்தமான் தேமுதிக செயலாளர் உதயசந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு தெரிவித்தார். இதையடுத்து, தேமுதிக செயலாளர் உதயசந்திரன் தமிழக மீனவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள தமிழக மீனவர்கள், மனமார நன்றியினை தெரிவித்தனர்.
மேலும் தங்களை மீட்டு தாயகம் அழைத்து செல்ல மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.”

The fishermen thanked the DMDK people and had requested them to pass on the information to the government to take essential steps to get them back to Tamilnadu.