Thalapathy “ Vijay As they always say, "it runs in the blood", the sa >> Read More... ” has been getting ready for the release of his next film, “Bigil” directed by Atlee Kumar Atlee Kumar is a movie director and screenwriter f >> Read More... . The film has “ Nayanthara Nayantara also called as Nayanthara Kurian, is a r >> Read More... ” in the lead role along with Vijay. The film will hit the screen for this Diwali. Meanwhile, an interesting post from Vijay’s mother Shoba Chandrasekhar Shoba Chandrasekhar has worked in the film industr >> Read More... had impressed everyone. In fact, it makes everyone, who reads it to drop out some tears. She feels proud to have his son in the hearts of crores of fans. Shoba says that she is one among his fans. Here is the touching article by Shoba about Vijay:
ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்தது பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால் நான் பெற்ற பிள்ளை இன்று கோடானுகோடி தாய்மார்கள் ரசிகர்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் அதை தளபதியாய் கொண்டாடி கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னை பற்றி. நீ என் கரம் பற்றி நடந்ததை பின் நடந்ததையெல்லாம் (ஏற்றம் இறக்கம் தோற்றல் போற்றல்) அசைபோட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சி குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது. அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில் இயங்குகையில் என் ஆழ்மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில் அதை எந்த பேனாவுக்குள் மை ஊற்றி எழுத முடியும். நீ உன் அழுகையை நிறுத்தி முதன்முதல் உன் பூவிதழ் விரித்து புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தை அளவு ரசிகர்களின் பெருவெள்ளத்திற்கு இடையே இன்பத் தத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க தேடிக் கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதிவிட முடியும். சுருங்கக்கூறின் திரு எம் கே தியாகராஜ பாகவதர் திரு எம் ஜி ராமச்சந்திரன் திரு ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்.
இப்படிக்கு
ஷோபா சந்திரசேகர்
தாய் / ரசிகை
LATEST NEWS
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES