Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Marxist Communist Party Condemns The Assembly Incidents!

Saturday, February 18th, 2017
Marxist Communist Party Condemns The Assembly Incidents!

G Ramakrishnan, the state president of Marxist Communist party stated that the happenings in the assembly are a humiliation to the government of Tamilnadu. He has stated that it is shameful to see the people, who are elected as MLAs by the public, creating chaos and damaging the government properties. After seeing the commotions in the assembly, violent activities started in the state, says Ramakrishnan. Here is the press statement by Marxist Communist Party.

“தமிழக சட்டப்பேரவையில் இன்று (18.2.2017) நடைபெற்ற நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இதையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் வன்முறை நடந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.  ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதை வன்முறையின் மூலமாக செய்துவிட முடியாது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர அனைத்துப் பகுதியினரும் ஒத்துழைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

நடைபெறும் நிகழ்வுகள் தமிழகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

 

-ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

18.02.2017