Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Kasthuri’s Sarcastic Post – Slams The Government

Sunday, May 10th, 2020
Kasthuri’s Sarcastic Post – Slams The Government

Kasthuri Tamil-Malayalam actress Kasthuri was on top of the >> Read More... ” slams the Tamilnadu government for opening the TASMAC Shops. After the Madras High Court ordered to shut the TASMAC Shops as the alcohol drinker, who came to buy them didn’t follow social distancing and didn’t wear the face masks. Now, the TN government appealed it to the Supreme Court against the Madras High Court verdict. This irked Kasthuri and she questioned if opening the TASMAC is necessary during this crisis. This is what she posted on her Facebook page: “தனியொருவனுக்கு தண்ணியில்லையினில் ஜகத்தினை அழித்திடுவோம்ங்கற அசுர வேகத்தோட இன்னிக்கு உச்ச நீதி மன்றத்துல தமிழகம் சார்பா ரெண்டு கேஸ் பைலை பண்ணியிருக்காங்க . மே 17 வரைக்கும் கூட தாக்கு பிடிக்க முடியாதாம். தண்ணியில்லாம தமிழகம் இருந்திறக்கூடாதாம் ! இது காவிரி பிரச்சினையா, முல்லை பெரியார் பிரச்சினையா , தமிழக மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினைக்கா என்று யாரும் தப்பா நினைச்சிறாதீங்க. அதையெல்லாம் விட மிக முக்கியமான, மக்களுக்கு அத்தியாவசியமான, சமூகத்துக்கு தேவையான சாராய மேட்டர் இது ! தங்கு தடையில்லாத தண்ணி சப்ளை நடத்தும் 'உரிமையை' கேட்டு தமிழக அரசு ஒரு மனு , மேலதிகமாக டாஸ்மாக் இன்னொரு மனு, சுப்ரீம் கோட்டுல இன்னிக்கி ! அட அடா ! தமிழனுக்கு தண்ணி வேணும்கற இந்த பொறுப்புணர்ச்சிய எப்படி பாராட்டுறதுன்னே புரியலையே!

இது கொள்கை முடிவாம். கோர்ட் இதில் தலையிட கூடாதாம். கொள்கைன்னா 'வாய்மையே வெல்லும்' 'தர்மம் தலைகாக்கும்' 'சம உரிமை சமூக நீதி' இதெல்லாம் கொள்கை. 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்றால், அது கொள்கை. அதை சொன்ன அண்ணா இன்று இருந்தால், 'அண்ணா திமுக ' அரசின் கொள்கையை பார்த்து என்ன சொல்லுவார்?

இங்கே யாரும் பூரண மதுவிலக்கை கூட கோரவில்லை. கொரோனா தொற்று அதிகரித்து அச்சுறுத்தும் வேளையில், டீக்கடை கூட திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதுக்கடையை திறப்பது என்ன லாஜிக் என்றுதான் கேட்கிறோம். பள்ளிகள், கடைகள், சினிமா, கோவில் தேவாலயங்கள், என், பார்க்கு கடைகரையை கூட மூடிவிட்டார்கள். கோவிலிலும் உடற்பயிற்சிக்கூடத்திலும் எதிர்பார்க்கமுடியாத சுயக்கட்டுப்பாட்டை மதுக்கடையில் உத்திரவாதம் குடிக்கிறது நமது அரசு!
கேரளாவில் மது என்பதை தவறாகவே பார்ப்பதில்லை. குடிப்பதில் சாதனையாளர்கள் என்று பெருமை பெற்றவர்கள் மலையாளிகள். பாண்டிச்சேரியும் மது விற்பனைக்கு பெயர் போனது. அப்பேற்பட்ட கேரளாவிலும் புதுச்சேரியுமே மதுக்கடைகளை ஊரடங்கு நேரத்தில் திறக்க முற்படவில்லை. அப்புறம் எதற்கு அண்டை மாநிலம் என்று சாக்கு சொல்லுகிறீர்கள்? ஊரடங்கு நேரத்தில் அடுத்த தெருவுக்கு கூட சென்றால் கூட ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள், அண்டை மாநிலத்துக்கு அவ்வளவு ஈசியாக ஆளை விட்ருவீங்களா? இப்பிடி சொல்வது நமது காவல்துறைக்கு அவமானமில்லையா.

அண்டை மாநிலத்துக்கு காசை கொடுக்காதே, பக்கத்துக்கு ஊருல போயி குடிக்கற அந்த பணத்தை எனக்கே குடு, நானே ஊத்தி கொடுக்கறேன் என்று சொல்லும் அரசு, அடுத்தது இது போன்ற வருமான இழப்புக்களை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம்? எப்படியெல்லாம் கொள்கை முடிவு எடுக்கலாம்? பக்கத்துக்கு மாநிலத்தில் லாட்டரி, சூதாட்ட விடுதிகள் உள்ளன. அங்கு என் நம்மாட்கள் போகவேண்டும், அதையும் இங்கே திறக்கலாம். உள்ளூரிலேயே எல்லாரும் லாட்டரியடிக்கலாம். கோவா நேபாள் ஸ்ரீலங்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளுகளில் கேசினோ உள்ளது. பணக்காரர்கள் அங்கே போய் விடுகிறார்கள். இங்கே மலிவு விலை சூதாட்ட விடுதிகளை தொடங்கி நம்ம மக்களை அடகு வைக்கலாம். பாகிஸ்தான் காரன் கள்ளநோட்டு அடிக்கறான். நாட்டுக்கு ரொம்ப நஷ்டம். கள்ளநோட்டை நாமே அடிச்சுட்டா நம்ம ஊரு அச்சு தொழிலும் கூடும், அண்டை நாட்டுக்காரனுக்கும் ஆப்பு வைச்சுடலாம். கள்ள மார்க்கெட்டில் கஞ்சா ஹெரோயின் போதை மருந்து விற்பனை அமோகமாக இருக்கிறது. கள்ள மார்க்கெட்டை முறைப்படுத்தி அங்கீகாரம் கொடுத்துவிட்டால், போதை பொருள் விற்பனை துறையில் அரசுக்கு நல்ல வரி வரும், மக்களுக்கும் தரமான போதை கிடைக்கும். பலான விஷயங்களுக்காக பாங்காக் வரை போகும் நம்ம ஆளுங்க பணத்தை அங்கே செலவு பண்ணிடறாங்க. அதனாலே....”

 

LATEST MOVIE REVIEWS


Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024

Today's Release

29 Mar, 2024